சுடச்சுட

  

  கோவில்பட்டி நகருக்குள் தனியார் பேருந்துகளை அனுமதிக்க கோரிக்கை

  By கோவில்பட்டி  |   Published on : 20th June 2015 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டி நகருக்குள் அனைத்து தனியார் பேருந்துகளையும் அனுமதிக்க வேண்டும் என கோவில்பட்டி வட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதுகுறித்து அச்சங்கத்தின் நிர்வாகிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் கண்ணபிரானிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

  தனியார் பேருந்துகள் செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில், திருநெல்வேலி, ராஜபாளையம், திருவேங்கடம் ஆகிய ஊர்களிலிருந்து கோவில்பட்டிக்கும், எட்டயபுரம், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, கடலையூர், கருப்பூர், விளாத்திகுளம், சாத்தூர், சிவகாசி ஆகிய ஊர்களுக்கு கோவில்பட்டி வழியாகவும் செல்லும் அனைத்து புறநகர் பேருந்துகளும் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து முறையான அனுமதியுடன் இயங்கி வருகின்றன.

  தற்போது, கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய கட்டுமானப் பணியால் கடந்த 17ஆம் தேதி முதல் அனைத்து புறநகர் பேருந்துகளும் கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

  இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே, தனியார் பேருந்துகள் கோவில்பட்டி நகருக்குள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  அவர்களிடம், இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.

  சிற்றுந்துகள் வேலைநிறுத்தம்:  இதனிடையே, தாற்காலிக மற்றும் நகர பேருந்து நிலையத்திற்குள் சிற்றுந்துகளையும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வெள்ளிக்கிழமை சிற்றுந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால், நகரில் இயங்கி வரும் 34 சிற்றுந்துகளில் 25 சிற்றுந்துகள் இயங்கவில்லை. இதையடுத்து சிற்றுந்து உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

  சிற்றுந்துகள் தாற்காலிக பேருந்து நிலையம் முன்பு பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு ராமசாமி தாஸ் பூங்கா மேற்கு தெரு வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால், தாற்காலிக பேருந்து நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரினர்.

  இதில் உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai