Enable Javscript for better performance
சாத்தான்குளம் அருகே நகை பறிப்பு வழக்கில் இருவருக்கு 3 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே நகை பறிப்பு வழக்கில் இருவருக்கு 3 ஆண்டு சிறை

    By சாத்தான்குளம்  |   Published on : 20th June 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகே ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் இருவருக்கு சாத்தான்குளம் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த சார்லஸ் பர்னபாஸ் மனைவி சில்வியா ஜெசிந்தா. இவர் தஞ்சைநகரத்திலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். கடந்த 4.8.2008இல் பணி முடிந்து ஆலங்கிணறு செல்லும் காட்டுப்பாதையில் நடந்து வந்தாராம்.

    அப்போது பைக்கில் வந்த இருவர் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி 12 பவுன் நகையைப் பறித்து சென்றனராம். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப்பதிந்து, வடக்கு விஜயநாராயணத்தைச் சேர்ந்த ராஜகோபால்  மகன் கடற்கரையாண்டி (34), சண்முகசுந்தரம் மகன் சுடலைக்கண்ணு (26) ஆகிய இருவரையும் கைது செய்தனர். சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இது தொடர்பான வழக்கில், நீதிபதி ஜெ. செல்வன் ஜேசுராஜா வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai