சுடச்சுட

  

  தனியாரில் வேலைவாய்ப்பு பெற திறன்மேம்பாட்டுப் பயிற்சி முகாம்

  By தூத்துக்குடி  |   Published on : 20th June 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடியில் தனியார் துறை பாதுகாப்பு சேவைப் பணிகளில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இலவச திறன் எய்தும் பயிற்சி திட்டத்துக்கான விண்ணப்பம் திங்கள்கிழமை (ஜூன் 22) விநியோகிக்கப்பட உள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு காவல் துறையுடன் இணைந்து இளைஞர்கள், இளம்பெண்கள் தனியார் துறையில் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் பாதுகாப்பு சேவைப் பணிகள் குறித்து 21 நாள்களுக்கு திறன் எய்தும் பயிற்சியை  இலவசமாக வழங்க உள்ளது.

  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காவலர் பயிற்சி மைதானத்தில் தினமும் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடைபெறும் பயிற்சியை நிறைவு செய்வோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, உடல் ஆரோக்கியம், 18 முதல் 45-க்கு மிகாத வயது வரம்பு உடையவர்கள் பயிற்சியில் சேரலாம்.   அசல் கல்விச்சான்று, சாதிச் சான்று, குடும்ப அட்டையின் அசல், அண்மையில் எடுக்கப்பட்ட 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் கொண்டு வர வேண்டும்.

  பயிற்சிக்கான விண்ணப்பங்கள் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரின் அலுவலகத்திலுள்ள காவலர் பயிற்சி வளாகத்தில் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் சேர விரும்புவோர் மேற்கூறிய தேதிகளில் காலை 10 மணிக்கு காவலர் பயிற்சி வளாகத்துக்கு நேரில் வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai