Enable Javscript for better performance
திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் அசுத்தம் செய்தால் அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் அசுத்தம் செய்தால் அபராதம்

    By திருச்செந்தூர்  |   Published on : 20th June 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் அசுத்தம் செய்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார்.

    திருச்செந்தூர் கோட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவைகுறித்த ஆய்வுக்கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, கோட்டாட்சியர் தெ.தியாகராஜன் முன்னிலையில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:

    பரமன்குறிச்சி - உடன்குடி சாலை வெள்ளாளன்விளை பகுதியிலுள்ள வேகத்தடைகள், திருச்செந்தூர் - சாத்தான்குளம் சாலை கீழ நாலுமூலைக்கிணறு பகுதியிலுள்ள வேகத்தடைகள் ஆகியவற்றை அகற்றுவது தொடர்பாக ஆய்வு செய்வது; திருச்செந்தூர் - வீரபாண்டியன்பட்டினம், பிரசாத்நகர் செல்லும் சாலையிலுள்ள பாலத்தில் தடுப்புச் சுவர் அமைப்பது; திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைப்பது; பகத்சிங் பேருந்து நிலையத்தில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது; பேருந்து நிலையம் எதிரே புதை சாக்கடை கான்கிரீட் தளத்தில் கடைகளின் ஆக்கிரமிப்பை அகற்றுவது; பேருந்து நிலையப் பகுதிக்குள் காணப்படும் குழிகளை சீரமைப்பது; தினசரி சந்தைப்பகுதியிலுள்ள பேரூராட்சிக்குச் சொந்தமான கழிவறைகளை அப்பகுதி வியாபாரிகள் சங்கத்தினர் பராமரித்துக்கொள்ள அனுமதி வழங்குவது; பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுப்பது; திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் அசுத்தம் செய்வோருக்கு அபராதம் விதிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    மேலும், திருச்செந்தூர் பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் கட்டாயம் வந்து செல்ல வேண்டும்; சன்னதித்தெருவில் பக்தர்களுக்கு இடையூறான வாகனப்போக்குவரத்தை தடைசெய்ய வேண்டும்; கீழத்திருச்செந்தூர் கிராமம், கணேசபுரம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளையும், உடன்குடி பேரூராட்சிப்பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளையும், திருச்செந்தூர் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

    இதில், வட்டாட்சியர்கள் சொ.வெங்கடாசலம் (திருச்செந்தூர்), பி.வாலசுப்பிரமணியன் (சாத்தான்குளம்), பேரூராட்சி செயல்அலுவலர்கள் சு.சுந்தரராஜன், வெ.முத்துகிருஷ்ணன், திருச்செந்தூர் சுகாதார ஆய்வாளர் கு.பூவையா, உதவி மின் பொறியாளர் எம்.குமார், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உதவி பொறியாளர் சந்தாணகிருஷ்ணன், கட்டளை கண்காணிப்பாளர் மாரிமுத்து, காயல்பட்டினம் நகரமைப்பு ஆய்வாளர் பர்குணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தெற்கு மாவட்டத்தலைவர் ரெ.காமராசு, நாடார் வியாபாரிகள் சங்கச் செயலர் கே.செல்வகுமார், யாதவ வியாபாரிகள் சங்கச் செயலர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai