சுடச்சுட

  

  தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, விவேகானந்த கேந்திரம் ஆகியவை சார்பில் உலக யோகா தின கருத்தரங்கு, கல்லூரி கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

   கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை வகித்தார். விவேகானந்தா கேந்திர நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். அவர் பேசியது: சூரியனிடம் இருந்து வரும் ஆற்றல், ஆனந்தத்தை உணர்ந்து நினைவாற்றலை அதிகரித்து உயிர் தேடலை அறிதலே யோகா ஆகும். பயிற்சியாலும், கல்வியாலும், அனுபவத்தாலும், விஞ்ஞான அறிவாலும் ஒவ்வொருவரும் யோகாவை செயல்படுத்துகிறார்கள்.  மருத்துவ ரீதியான உடல் சமநிலையை யோகா அளிப்பதாக, இன்றைய நவீன மருத்துவ உலகமும் யோகாவை சிகிச்சை முறையாக செயல்படுத்தி வருகிறது. மனித மூளையின் செயல்பாடுகளை துரிதப்படுத்தும் கலை யோகா. சமத்துவம் அன்பு, கருணை உணர்வுகளை வெளிப்படுத்தி மூச்சு, ரத்த ஓட்டம் போன்ற செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தி ஆரோக்கிய வாழ்வை அளிக்கிறது என்றார் அவர்.

   கல்லூரி இயக்குநர் சக்திவேல், யோகா பயிற்சியாளர் பாகவததாஸ், யோகா கிளப் ஒருங்கிணைப்பாளர் செந்தூர்பாண்டி உள்ளிட்டோர் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai