Enable Javscript for better performance
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளத் தொழில்நுட்பங்களை கண்டறிதல் அவசியம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளத் தொழில்நுட்பங்களை கண்டறிதல் அவசியம்

    By தூத்துக்குடி  |   Published on : 20th June 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளம் சார்ந்த தொழில்நுட்பங்களை மீன்வளப் பல்கலைக்கழகம் கண்டறிய வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.

     தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  பொதுவிஜய நாள் விழாவில் அவர் மேலும் பேசியதாவது: மீன்வளப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதன் நோக்கமும், பயன்பாடும் மக்களுக்கு சென்றடைய வேண்டும்.  தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையைப் பெற்று மிகுந்த மீன் வளத்துடன் காணப்படுவதால், மீன்வளம் சார்ந்த தொழில்நுட்பங்களை மீன்வளப் பல்கலைக்கழகம் கண்டறிய வேண்டும். அவை சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான பட்டப்படிப்பு பாடங்களை மீன்வளக் கல்வியில் புகுத்த வேண்டும்.

    மீன் உணவின் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டும். மீன்வளமும், அதற்கான சமுதாய தேவைகளும் அதிகரிக்கப்படுவது தற்போதைய சூழ்நிலையாக இருப்பதால் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகமானது மீன் சந்தைப்படுத்துதலையும், உள்நாட்டு மீன் விற்பனை போன்ற துறைகளில் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.

    தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாஸ்கரன் மணிமாறன் பேசியதாவது:

    தமிழக அரசு மீன்வளத்துக்காக அதிக நிதியுதவிகளை வழங்கி வருவது மீன்வளத்திற்கும், அதன் மேம்பாட்டிற்கும் முக்கிய வழிவகையாகும். இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 2012இல் இருந்து 2015 வரை பொன்னேரியிலும், நாகப்பட்டினத்திலும் 2 புதிய கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு, அரசு சாரா துறைகளில் மீன்வளப் பட்டதாரிகள் ஈடுபட்டு மீன்வள மேம்பாட்டிற்காக உழைக்கின்றனர் என்றார் அவர்.

    நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் கோ. சுகுமார்,  மீன்வள விரிவாக்கத்துறை தலைவர் சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுவிஜய நாளையொட்டி கல்லூரியிலுள்ள அருங்காட்சியகம், நூலகம், திலேப்பியா மீன் குஞ்சு பொரிப்பகம், கணினி மீன்வளக் கல்விக்கூடம், மீன் பண்ணைகள், அலங்கார மீன்களின் காட்சியமைப்பு, மீன் தீவனத் தயாரிப்பு இயந்திரக்கூடம், மீன்வள உயிரியல் ஆய்வுக்கூடம், கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புக் கண்காட்சி, ஒலி-ஒளிக்கூடம், நோய் கண்டறிதல் மற்றும் மேலாண்மை ஆய்வுக்கூடம், மீன் தரக்கட்டுப்பாடு ஆய்வகம், மீன்பதப்படுத்துதல் ஆய்வுக்கூடம், மீன்பிடி இயந்திர  தொழில்பட்டறை, மீன்வளச் சுற்றுச்சூழலியல் ஆய்வுக்கூடம், மீன்வள உயிரியல் தொழில்நுட்ப ஆய்வகம், மீன்வளப் பொருளியல் கூடம் ஆகியவற்றை பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் பார்வையிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai