Enable Javscript for better performance
பள்ளி மாணவி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி அருகே பெற்றோர்கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டுத்  தற்கொலை செய்துகொண்டார்.

    உடன்குடி தேரியூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி லதா. தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஜெயபால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மூன்றாவது மகள் யோகலட்சுமி(16), உடன்குடியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். யோகலட்சுமியை பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என கூறி அவரது தாய் கண்டித்தாராம்.

    இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், யோகலட்சுமி சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    ஆத்தூரில் இளைஞர் தற்கொலை

    ஆத்தூரில் வெள்ளிக்கிழமை இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    ஆத்தூர் கீழரதவீதி சிதம்பரவேல் மகன் சோமசுந்தரம்(26). இவர் தூத்துக்குடியிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.திருமணமாகாத இவர் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தனது வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிதம்பரவேல் புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    சைக்கிள்- லாரி மோதல்: முதியவர் சாவு

    சாத்தான்குளம் அருகே சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் இறந்தார்.

    அறிவான்மொழியைச் சேர்ந்தவர் வே. சுப்பிரமணியன் (70). தொழிலாளியான இவர் வியாழக்கிழமை சைக்கிளில் ஆனந்தபுரம் வந்தாராம். பின்னர் வீடு திரும்பிய போது அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சாத்தான்குளத்தில் இருந்து வந்த டிப்பர் லாரி அவரது சைக்கிள் மீது மோதியதாம். இதில் காயமடைந்த சுப்பிரமணியன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு இறந்தார். இதுகுறித்து சாத்தான்குளம்  உதவி ஆய்வாளர் மீஹா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai