சுடச்சுட

    

    கயத்தாறு அருகே வெள்ளிக்கிழமை பைக்கும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் முதியவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

    கயத்தாறையடுத்த கே.வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் ரா.சுப்பையா (68). இவர், தனது பேத்திகள் மு.காயத்ரி (19), ச.வனிதா (17) ஆகியோருடன் பைக்கில் கழுகுமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.  பழங்கோட்டை அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த டிராக்டரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், பைக்கில் வந்த 3 பேரும் காயமடைந்தனர்.  கயத்தாறு போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து டிராக்டர் ஓட்டுநர் களப்பான்குளத்தைச் சேர்ந்த வே.ராஜா என்ற குமாரிடம்(25) விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai