சுடச்சுட

    

    மாணவர் விடுதி ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கை: ஆர்ப்பாட்டம் வாபஸ்

    By கோவில்பட்டி  |   Published on : 20th June 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி அரசு மாணவர் விடுதி அருகேயுள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதைக் கண்டித்தும், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வலியுறுத்தியும்  வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

     இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அரசு மாணவர் விடுதி அருகே உள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

     இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜோதி தலைமையில்  பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மாணவர் விடுதிக்கு அருகே உள்ள நிலத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான நிலம் என்ற வாசகம் அடங்கிய விளம்பர பதாகையை சனிக்கிழமைக்குள் (ஜூன் 20) வைக்கவும், ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கில் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு பொதுப்பணித் துறை (கட்டடம்) உதவி செயற்பொறியாளர் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு இரண்டு மாத காலத்திற்குள் விடுதியைச் சுற்றி 4 புறமும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆக்கிரமிப்புதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்யவும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.  இதையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai