சுடச்சுட

  

  அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு விருது

  By தூத்துக்குடி  |   Published on : 21st June 2015 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொது தேர்வுகளில் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த 32 மாணவர், மாணவிகளுக்கு ஸ்டெர்லைட் ஸ்காலஸ்டிக் எக்ஸ்லன்ஸ் என்ற விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

   மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், ஸ்டெர்லைட் காப்பர் முதன்மை செயல் அலுவலர் ராம்நாத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு மாணவர், மாணவிகளுக்கும், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் விருதுகளை வழங்கினர்.

  பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு முறையே ரூ. 50 ஆயிரம், ரூ. 30 ஆயிரம் மற்றும் ரூ. 20 ஆயிரம்  ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு முறையே ரூ. 25 ஆயிரம், ரூ. 20 ஆயிரம், ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

   நிகழ்ச்சியில், ஸ்டெர்லைட் காப்பர் தலைமை இயக்க அலுவலர் பங்கஜ்குமார்,  வணிகப் பிரிவுத் தலைவர் தனவேல், மனிதவள பிரிவுத் தலைவர் சுரேஷ் போஸ்,  மின்சாரம் மற்றும் ஆசிட் விற்பனை பிரிவுத் தலைவர் ஆ. முருகேஸ்வரன், தலைமை மருத்துவர் மற்றும் சமுதாய வளர்ச்சி பிரிவுத் தலைவர் கைலாசம், மக்கள் தொடர்பு தலைவர் ஆ. இசக்கியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai