Enable Javscript for better performance
ஆறுமுகனேரியில் சிவப்பு சாத்தி வீதி உலா- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயில் ஆனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு சனிக்கிழமை இரவு ஸ்ரீநடராஜ பெருமான் சிவப்பு சாத்தியில் வீதி உலா வந்தார்.

    இத்திருக்கோயில் ஆனி உத்திர பெருந்திருவிழா இம்மாதம் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாநாள்களில் தினமும் காலை, இரவில் சுவாமி, அம்பாள் பூஞ்சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றுவருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிவப்பு சாத்தி வீதி உலா 7 ஆம் திருநாளான சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி அன்று காலை 10.30 மணிக்கு ஸ்ரீநடராஜருக்கு திருக்காப்பு கட்டுதலும் உருகு சட்டசேவையும் நடைபெற்றது. மாலையில் சிறப்பு அபிஷேக அலங்கார சாயரட்சை பூஜை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஸ்ரீநடராஜ பெருமான் சிவப்பு சாத்தி வீதி உலா வந்தார். பஞ்சமூர்த்தி திருவீதி உலாவும் நடைபெற்றது.  எட்டாம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) காலை வெள்ளை சாத்தி வீதி உலாவும், இரவில் பச்சை சாத்தி வீதி உலாவும் நடைபெறுகிறது. பத்தாம் திருநாளான 26ஆம் தேதி இரவு சுவாமி அம்பாள் சப்தவர்ண காட்சி திருவீதி உலா நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai