ஆலந்தலை தூய பேதுரு தூய பவுல் ஆலய திருவிழா கொடியேற்றம்
By திருச்செந்தூர் | Published on : 21st June 2015 02:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை தூய பேதுரு தூய பவுல் ஆலய குரு விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலையில் ஆலயத்திலிருந்து ரொசாரி மாதா சபையினர் கொடியை கையில் ஏந்தியவாறு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ஆலயத்திற்கு வந்தனர். அதன்பின்னர் ஜெபத்தை தொடர்ந்து 6.45 மணிக்கு கொம்புத்துறை பங்குத் தந்தை விக்டர்லோ தலைமையில் கொடியேற்றப்பட்டு, திருப்பலி நடைபெற்றது.
இதில் பங்குத் தந்தைகள் ஜேசுதாஸ் (மணப்பாடு), மைக்கேல் கிராஸிஸ் (ஜீவா நகர்), ராஜன் (வடக்கன்குளம்), டைட்டஸ் (இடிந்தகரை), அலெக்சாண்டர் (ஆலந்தலை) உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இம்மாதம் 28 ஆம் தேதி 9 ஆம் திருவிழா அன்று உவரி பங்குத் தந்தை ஜோசப் தலைமையில் மாலை ஆராதனையும், 29 ஆம் தேதி 10 ஆம் திருவிழா அன்று காலை 7 மணிக்கு அமலிநகர் பங்குத் தந்தை அந்தோனி ஜெகதீசன் தலைமையில் திருவிழா திருப்பலியும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மணப்பாடு மறைவட்ட முதன்மை தந்தை இருதயராஜ் தலைமையில் நற்கருணை பவனியை தொடர்ந்து தூத்துக்குடி இனிகோ நகர் பங்குத் தந்தை பெஞ்சமின் பிசுஷா மறையுரையாற்றுகிறார்.
திருவிழா நாள்களில் தினமும் காலை 6.15 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவையும் நடைபெறுகின்றன.