சுடச்சுட

    

    கோவில்பட்டியில் இரும்பு கதவு விழுந்து காவலாளி சாவு

    By கோவில்பட்டி  |   Published on : 21st June 2015 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் இரும்பு கதவு விழுந்ததில் அதில் சிக்கிய காவலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கோவில்பட்டி ஆழ்வார் தெருவைச் சேர்ந்தவர் ஞானசாமி மகன் தேவராஜன்(62). இவர், இங்குள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் காவலாளியாக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்தாராம்.

    இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை பள்ளி விளையாட்டு மைதானத்தின் முன்பகுதியில் உள்ள கதவை இழுத்த போது, கதவு அதன் தண்டவாளத்தை விட்டு கீழே விழுந்ததாம். அப்போது அதில் சிக்கிய காவலாளி தேவராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தாராம்.

    தகவலறிந்தவுடன் கிழக்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai