சுடச்சுட

    

    தூத்துக்குடி கடற்கரையோரப் பகுதிகளில் அதிநவீன வாகனம் மூலம் கண்காணிப்பு

    By தூத்துக்குடி  |   Published on : 21st June 2015 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி கடற்கரையோரப் பகுதிகளில் அதிநவீன ரோந்து வாகனம் மூலம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி தருவைகுளத்தில் உள்ள கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்தில், இரண்டு பேர் அமர்ந்து செல்லக்கூடிய அதிநவீன ரோந்து வாகனம் உள்ளது. தற்போது நான்குபேர் அமர்ந்து செல்லக்கூடிய அதிநவீன ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் சாதாரண தரையிலும், கடற்கரை மணல் தரையிலும் இந்த வாகனம் அதிவேகமாகச் செல்லக்கூடிய திறன்படைத்ததாகும்.

    இந்நிலையில், புதிதாக வழங்கப்பட்ட ரோந்து வாகனத்தில் தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் போலீஸார் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்கும் வகையில் இந்த நவீன ரக வாகனம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன்மூலம் ரோந்து பணியை விரைந்து செயல்படுத்த முடியும் என்றும் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai