சுடச்சுட

    

    நாசரேத்தில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி தொடக்கம்

    By சாத்தான்குளம்  |   Published on : 21st June 2015 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாசரேத்தில் மாவட்ட அளவிலான மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மர்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான ஐவர் மின்னொளி கால்பந்து போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    இப்போட்டியை நாசரேத் பேரூராட்சித் தலைவர் ரவிசெல்வகுமார் தொடங்கிவைத்தார். முதல் ஆட்டத்தில் நெல்லை யூத் அணியும், நாசரேத் மர்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப்- பி அணியும் மோதின. இதில், நெல்லை யூத் அணி வெற்றிபெற்றது.

    இரண்டாவது ஆட்டத்தில் தூத்துக்குடி செளத் கோஸ்ட் அணியும், புன்னக்காயல் அணியும் மோதின. இதில், தூத்துக்குடி அணி வெற்றிபெற்றது. மூன்றாவது ஆட்டத்தில் நாசரேத் மர்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப்- ஏ அணியும், தூத்துக்குடி வில்சன் கிளப் அணியும் மோதின. இதில், நாசரேத் மர்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப்- ஏ  அணி வெற்றிபெற்றது.

    நான்காவது ஆட்டத்தில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி அணியும், ஆறுமுகனேரி சாகுபுரம் டி.சி.டபூள்யூ அணியும் மோதின. இதில், நாசரேத் அணி வெற்றிபெற்றது.

    ஏற்பாடுகளை நாசரேத் மர்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் தலைவர் ரூபன்துரைசிங், உதவித் தலைவர்கள் ராபர்ட், பொன்ராஜ், செயலர்கள்  அருண்சாமுவேல், விமல்சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai