சுடச்சுட

  

  நீதிமன்றத்தில் வழக்கு முடிவடைந்ததும் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும்

  By தூத்துக்குடி  |   Published on : 21st June 2015 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்ததும் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்றார் நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான ஆர். சரத்குமார்.

  தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து சங்கத்தின் கடனை அடைத்துள்ளோம். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுவது என செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடி முடிவெடுத்து ஒப்புதல் பெற்ற பிறகே பழைய கட்டடம் இடிக்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் மீது இப்போது குறை கூறுபவர்கள், பொதுக்குழு முடிந்த 8 மாதங்களுக்கு பின்னர் எங்கு சென்றார்கள்?  பொதுக்குழுவிலும் அவர்கள் கருத்து கூறவில்லை.

  நடிகர் சங்கப் பிரச்னை பற்றி இனி பேசுவது இல்லை என முடிவு செய்துள்ளேன். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு முடிவுக்கு வந்ததும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.

  கடந்த 2013 ஆம் ஆண்டு இளைஞர்கள் பொறுப்புக்கு வர வேண்டும் என நான் பேசியது உண்மைதான். ஆனால், நான் பதவி விலகிக் கொள்வதாக அறிவித்தாலும், புதிய கட்டடம் கட்டிய பிறகு அந்த முடிவை எடுங்கள் என முக்கிய நிர்வாகிகள் மற்றும் சக உறுப்பினர்கள் கூறுகின்றனர். எனவே, மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

  சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஜூன் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பிரசாரம் செய்கிறேன். முதல்வர் ஜெயலலிதாவுக்கு 90 சதவீத வாக்குகள் கிடைக்கும். 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியிலேயே தொடருவோம். அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றார் அவர்.

  இதையெடுத்து, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற கட்சி வளர்ச்சி நிதியளிப்பு விழாவில் சரத்குமார் கலந்துகொண்டு நிர்வாகிகளிடம் இருந்து நிதி பெற்றார்.நிகழ்ச்சியில், துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச் செயலர் கரு. நாகராஜன், தூத்துக்குடி மாவட்டச் செயலர் என். சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai