சுடச்சுட

    

    நெல் விதைப் பண்ணைகளில் விதைச் சான்று அதிகாரி ஆய்வு

    By ஆறுமுகனேரி  |   Published on : 21st June 2015 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நெல் விதைப் பண்ணைகளில் விதைச்சான்று இணை இயக்குநர் பழனிச்சாமி ஆய்வு செய்தார்.

    செய்துங்கநல்லூர் வட்டாரத்தில் வல்லநாடு கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த நெல் ஆடுதுறை 36 விதைப்பண்ணையில் நடைபெற்ற ஆய்வின்போது நெல்விதைப் பண்ணைகளை கலவன் இன்றி பராமரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

    மேலும், வல்லநாடு கிராமத்தில் அமைந்துள்ள தனியார் விதைச் சுத்தி நிலையத்தையும் விதைச் சான்று இணை இயக்குநர் ஆய்வு செய்தார். சுத்தி நிலைய ஆய்வின்போது சுத்திகரிக்கப்பட்ட விதை விவரம், வயல்மட்ட விதை விவரம், சான்றட்டைக் கட்டிய விதைகள் இருப்பு விவரத்தையும், விதை மிதவை அளவையும் அவர் ஆய்வு செய்து தரமான விதைகளை உற்பத்தி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து தூத்துக்குடி விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் விதைச்சான்று சாதனை விவரங்களை விதைச்சான்று அலுவலர்களுடன் அவர் ஆய்வு செய்தார்.

    விதைப் பண்ணைகளை ஆய்வு செய்யும்போது பயிர் ரகங்களின் குணாதிசயங்களை அறிந்து கலவன்களை சாகுபடியாளர்களுக்கு காண்பித்து அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்போது அவர் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது தூத்துக்குடி விதைச்சான்று உதவி இயக்குநர் பாரதி மற்றும் விதைச்சான்று அலுவலர்கள் விக்னேஷ்வரி, கல்பனாதேவி, ஊமைத்துரை, சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai