சுடச்சுட

  

  பாசனத்துக்கு கூடுதல் தண்ணீரை திறக்கக் கோரி ஏரலில் 25இல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 21st June 2015 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடக் கோரி இம்மாதம் 25ஆம் தேதி ஏரலில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

  தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தாமிரவருணி பாசன விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட விவசாய சங்கச் செயலர் பெருமாள், துணைத் தலைவர் சீனிவாசன், துணைச் செயலர் மாரியப்பன், பொருளாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இதில், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடக் கோரி ஏரலில் ஜூன் 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். ஜூன் 30ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.

  தாமிரவருணி பாசனத்தில் பயிரிடப்பட்ட வாழைகளுக்கு தகுந்த விலை இல்லாமல் விவசாயிகள் கடனாளியாகியுள்ள நிலையில், மீண்டும் விவசாயம் செய்ய முடியாத நிலைமை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை ஜூலை 2ஆம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கருங்குளம் ஒன்றிய விவசாய சங்கத் தலைவர் நம்பிராஜன், ராஜ்குமார், தெய்வசெயல்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் கெங்கன், ஆழ்வார்திருநகரி விவசாய சங்கத் தலைவர்கள் சுப்பையா, ஜெயராஜ், ராமச்சந்திரன், ராஜாங்கம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai