சுடச்சுட

    

    பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

    By கோவில்பட்டி/சாத்தான்குளம்  |   Published on : 21st June 2015 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி, நாசரேத்தில் அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில்பள்ளி அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் வேல்முருகனுக்கு ரூ.2 ஆயிரம், 2ஆம் இடம் பெற்ற பாலாஜிக்கு ரூ.1000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.  முன்னாள் தலைமையாசிரியர் சுப்பிரமணியன் வழங்கிய இந்தப் பரிசை பள்ளித்  தலைமையாசிரியர் சீனிவாசன் மாணவர்களிடம் வழங்கினார்.

    தொழிற்கல்வி ஆசிரியர் சிவஞானம் சார்பில், முதலிடம் பிடித்த வேல்முருகனுக்கு ரூ.1000, பொது இயந்திரவியல் பாடப்பிரிவில் முதல் மதிப்பெண்

    பெற்ற மாணவர் வேல்முருகனுக்கு ரூ.1000, 2ஆம் இடம் பெற்ற மாணவர் மலையரசனுக்கு ரூ.750 வழங்கப்பட்டது. மின் இயந்திரங்களும், சாதனங்களும் பிரிவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் பாலாஜிக்கு ஆசிரியர் குருமூர்த்தி ரூ.500 ரொக்கப் பரிசு வழங்கினார்.

    11ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் முதல் மதிப்பெண் பெற்ற  மாணவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

    பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தேவராஜ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டிப் பேசினர்.

    விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் விஜயகுமார், குருமூர்த்தி, சிவகுமார், ராஜாசுந்தர், தனலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

    சாத்தான்குளம்:  நாசரேத் கிளை நுலக வாசகர்  வட்டம் சார்பில் பேரூராட்சி அளவில் அரசு பொது தேர்வில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.

     விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் அருள்ராஜ் தலைமை  வகித்தார். நுலக புரவலர்கள் மைக்கேல்சற்குணம், அய்யயாகுட்டி, ஆறுமுகபெருமாள், ஜெகதீசன், சுடலைமுத்து, ஜான் பிரிட்டோ, ராக்லாண்ட் பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் துரைராஜ் வரவேற்றார். 

     ஓய்வு பெற்ற தொலை தொடர்பு அலுவலர் ஆதவசிங் பேசினார். நாசரேத் பேரூராட்சித் தலைவர் ரவி செல்வகுமார்,  10, 12 ஆம் அரசு பொது தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்து சாதனை படைத்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். ஓய்வுபெற்ற பேராசிரியர் காசிராஜன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நாசரேத் நுலகர் துரைராஜ் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai