சுடச்சுட

    

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சைக்கிள் பேரணியில் சனிக்கிழமை ஈடுபட்டனர். பள்ளி முன்பிருந்து தொடங்கிய இப்பேரணியை தலைமையாசிரியர் (பொறுப்பு) விஜயலட்சுமி முன்னிலையில், பள்ளி ஆசிரியை ஷோபனா குமாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இப்பேரணி கழுகுமலையில் நிறைவடைந்தது. பின்னர் கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயில் அருகே யோகாசனத்தில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் சுப்பாராஜு செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai