சுடச்சுட

  

  வெளிநாடுகளில் வசிக்கும் காயல் நல மன்றத்தினர் காயல்பட்டினத்திலுள்ள ஏழை மக்களுக்கு ரமலான் நோன்பு மாதத்தையொட்டி அத்தியாவசியப் பொருள்களை வழங்கியுள்ளனர். 

   இதையொட்டி சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி காயல் நல மன்றங்கள் இணைந்து காயல்பட்டினத்திலுள்ள 168 ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.2,597 மதிப்பில் மொத்தம் ரூ.4 லட்சத்து 36 ஆயிரத்து 296 ரூபாய் செலவில் 34 வகையான அத்தியாவசிய சமையல் பொருள்களை வழங்கினர்.

   சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் 118 குடும்பங்களுக்கு ரூ.3 லட்சத்து 6 ஆயிரத்து 446 மதிப்பிலும், அபுதாபி காயல் நல மன்றம் சார்பில் 50 குடும்பங்களுக்கு ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 850  செலவில் பொருள்கள் வழங்கப்பட்டன. 

  சிங்கப்பூர் காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான், செயற்குழு உறுப்பினர் எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாயில், சமூக ஆர்வலர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, சோனா மானாத்தம்பி ஆகியோர் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று பொருள்களை வழங்கினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai