சுடச்சுட

    

    கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு இளைஞர் இறந்தார்.

    கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலை ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாக கோவில்பட்டி ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கிடைத்ததாம். இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீஸார் ரயிலில் அடிபட்டு கிடந்த சடலத்தை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அவர், நடராஜபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மகன்  மாரிமுத்து(17) என்பது தெரியவந்தது. மேலும், நாகர்கோவிலிலிருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் அடிபட்டு இறந்த இவர், ரயில் தண்டவாளத்தை கடக்க முயலும் போது இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai