சுடச்சுட

  

  கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  கோவில்பட்டி புத்துயிர் ரத்த தான கழகம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை, டி.சி.டபிள்யூ. பவுன்டேசன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் ஆயிர வைசிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமுக்கு புத்துயிர் ரத்த தான கழகச் செயலர் க. தமிழரசன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கத் துணைத் தலைவர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். முகாமை வழக்குரைஞர் ஜி.எம். சங்கர்கணேஷ் தொடங்கிவைத்தார். மருத்துவர் அஸ்வின் தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 80 பேருக்கு சிகிச்சை அளித்தனர். இதில், 28 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். முகாமில், அரசு கிளை நூலகர் பூல்பாண்டி, இலக்கிய உலா ரவீந்தர், ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஜானகி, வட்டார நிர்வாகிகள் உத்தண்டராமன், டி.சி.டபிள்யூ. பவுன்டேசன் டிரஸ்டி விக்னேஷ், வழக்குரைஞர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai