Enable Javscript for better performance
உயர் அழுத்த மின்சாரம்: 40 வீடுகளில் தொலைக்காட்சி, மின்விளக்குகள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    உயர் அழுத்த மின்சாரம்: 40 வீடுகளில் தொலைக்காட்சி, மின்விளக்குகள் சேதம்

    By கோவில்பட்டி  |   Published on : 22nd June 2015 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி பாரதி நகரில் ஞாயிற்றுக்கிழமை உயர்அழுத்த மின்சாரத்தால் வீடுகளில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டி, குழல் விளக்குகள் சேதமடைந்தன.

    கோவில்பட்டி - பசுவந்தனை சாலை மற்றும் பாரதி நகர் நடுத்தெரு பகுதிகளில் உள்ள வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணிக்கு திடீரென ஏற்பட்ட உயர் அழுத்த மின்சாரம் காரணமாக 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் பயன்பாட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, குழல் விளக்குகள் வெடித்து சேதமடைந்தன.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் யாரும் வராததையடுத்து அப்பகுதி மக்கள் சேதமடைந்த தொலைக்காட்சி பெட்டியுடன் பசுவந்தனை சாலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai