சுடச்சுட

  

  எட்டயபுரத்தில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி

  By எட்டயபுரம்,  |   Published on : 22nd June 2015 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எட்டயபுரத்தில் மனவளக்கலை மன்றம் சார்பில் சர்வதேச யோகா தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

  இதையொட்டி ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற யோகாசனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலர் ராம்குமார் ராஜா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

  நிகழ்ச்சியின்போது, யோகாசனப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் உடலையும், மனதையும் சீராக ஒழுங்குபடுத்தி அமைதியாக, ஆரோக்கியமாக வாழலாம் என பேராசிரியர் ஜெயகாந்தன் பேசினார்.

  தொடர்ந்து பல்வேறு ஆசனங்கள் குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

  இதில், பேராசிரியை அனுசுயா, ஆசிரியர்கள், பாரதி முற்போக்கு வாலிபர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் முத்துகுமார், வர்த்தகர் சங்க பிரதிநிதிகள், மனவளக் கலை மன்ற பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மாணவ, மாணவியர் பலர் கலந்துகொண்டனர். யோகா பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராம்கி வரவேற்றார். ஆன்மிகத் தொண்டர் உலகநாதன் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai