சுடச்சுட

    

    எட்டயபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    படர்ந்தபுளியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா (27). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளதாம்.

    இந்நிலையில் அம்பிகாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், செல்வகுமாரும் மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவாராம்.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தம்பதிக்கிடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டதாம். இதையடுத்து அம்பிகா மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தாராம்.

    தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று தீக்காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த அம்பிகாவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எனினும் வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுகுறித்து விசாரித்து வரும் எட்டயபுரம் போலீஸார் செல்வகுமாரை தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai