Enable Javscript for better performance
கால்பந்து போட்டி: மர்காஷிஸ் அணி சாம்பியன் - Dinamani

சுடச்சுட

    

    கால்பந்து போட்டி: மர்காஷிஸ் அணி சாம்பியன்

    By சாத்தான்குளம்,  |   Published on : 22nd June 2015 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாசரேத்தில் மின்னொளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து இறுதிப் போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் ஏ அணி வெற்றி பெற்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.

    நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மர்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் சார்பில் மின்னொளியில் மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றன.

    2ஆவது நாள் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தூத்துக்குடி செüத் கோஸ்ட் அணியும், நெல்லை யூத் அணியும மோதின. இரண்டு அணியினரும் தலா 2 கோல் பெற்றிருந்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. வெற்றி தோல்வியை நிர்ணயிக்க டைபிரேக்கர் முறை பின்பற்றப்பட்டது.

    இதில் தூத்துக்குடி செüத் கோஸ்ட் அணி 4 கோலும், நெல்லை யூத் அணி 3 கோலும் பெற்றன. தூத்துக்குடி செüத் கோஸ்ட் அணி ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரண்டாவது ஆட்டத்தில் நாசரேத் மர்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் ஏ அணியும், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி அணியும் மோதின. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் நாசரேத் மர்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் ஏ அணி வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில், நாசரேத் மர்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் ஏ அணியும், தூத்துக்குடி செüத் கோஸ்ட் அணியும் மோதின. இதில் 4-0 என்ற கோல்கணக்கில் நாசரேத் மர்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் ஏ அணி வெற்றி பெற்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது. போட்டியின் நடுவர்களாக மேஷாக், ராஜேஷ், தனபால், பிரைட்டன் ஆகியோர் செயல்பட்டனர்.

    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, முன்னாள் திருச்செந்தூர் மக்களவை உறுப்பினர் ஏ.டி.கே. ஜெயசீலன் தலைமை வகித்து வெற்றி பெற்ற நாசரேத் மர்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் ஏ அணிக்கு சுழற்கோப்பையையும், ரொக்கப்பணம் ரூ. 7 ஆயிரத்தையும் வழங்கினார்.

    2ஆம் இடம் பெற்ற தூத்துக்குடி செüத் கோஸ்ட் அணிக்கு சுழற்கோப்பையையும், ரொக்கப்பணம் ரூ. 5 ஆயிரத்தையும் வழங்கினார். சிறந்த ஆட்டக்காரர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

    ஏற்பாடுகளை நாசரேத் மர்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் தலைவர் ரூபன்துரைசிங், உதவி தலைவர்கள் ராபர்ட், பொன்ராஜ், செயலர்கள் அருண்சாமுவேல், விமல்சுதாகர், பொருளாளர் ஜாய்சன் மற்றும் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai