சுடச்சுட

  

  குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

  கோயில் கலையரங்கில், நெல்லை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கண்ணதாசன் முன்னிலையில் நடைபெற்ற இந்த உண்டியல் எண்ணும் பணியில் 41 லட்சத்து 33 ஆயிரத்தி 506 ரூபாயும், தங்கம் 230 கிராமும், வெள்ளி 770 கிராமும் இருந்தது.

  இப்பணியில் பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள், கோயில் பணியாளர்கள், சமூக ஆர்வலர் ஆனந்தலிங்கம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

  ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ச. கணேசன் செய்திருந்தார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai