சுடச்சுட

  

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை யோகாசன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழகம் சார்பில், கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு, சென்னை தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழகத் தலைவர் மதன்குமார் தலைமை வகித்து, யோகாசன நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தார். பொதுச்செயலர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். இதில், கோவில்பட்டி நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.

  இதுபோல, இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் விருதுநகர் என்.சி.சி. 28ஆவது அணி பட்டாலியன் சார்பில் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

  இந்நிகழ்ச்சிக்கு அதிகாரி அன்சார் முகமது தலைமை வகித்து, யோகா நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தார். இதில், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி, இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளி, நாடார் மேல்நிலைப் பள்ளி, வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.

  கோவில்பட்டி பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், சர்வதேச யோகா தினம் மற்றும் நல்லிணக்கம் மற்றும் உலக அமைதிக்காக சிறப்பு தியான நிகழ்ச்சி நடைபெற்றது. நிலைய பொறுப்பாளர் பிரம்மகுமாரி செல்வி யோகாவின் மகத்துவம் குறித்துப் பேசினார். இதில், கோவில்பட்டி அம்பாள் லயன்ஸ் கிளப் மண்டலத் தலைவர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

  சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.

  தூத்துக்குடி மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான யோகா என்ற தலைப்பில் கோவில்பட்டி சுற்று வட்டார இளைஞர் மாதிரி பாராளுமன்ற விவாத நிகழ்ச்சி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai