Enable Javscript for better performance
சாத்தான்குளத்தில் சர்வதேச யோகா தினம்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளத்தில் ஒன்றிய பாஜக மற்றும் இளைஞரணி சார்பில் சர்வதேச யோகா தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு, மாவட்ட பாஜக இளைஞரணிச் செயலர் ஏ. பரமசிவன் தலைமை வகித்தார். மாவட்ட பாஜக துணைத் தலைவர் எஸ். செல்வராஜ் யோகா நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். இதில், மாநில இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் மாயகூத்தன் கலந்துகொண்டு பல்வேறு யோகானங்களைச் செய்து காண்பித்தார். பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    இதில், மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவர் ஆர்.எஸ். சுந்தரவேல், பாஜக ஒன்றிய துணைச் செயலர் செல்வராஜ், ஒன்றிய பொதுச் செயலர் முத்துலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணித் தலைவர் செல்வகணேஷ், ஒன்றிய இளைஞரணிச் செயலர் வி.ஆர். குமார், ஒன்றியச் செயலர் சரவணப்பாண்டி, ஒன்றிய சிறுபான்மை பிரிவுத் தலைவர் சந்திரபோஸ், கோட்டத் தலைவர் மன்னர்ராஜா, கிராமத் தலைவர் முருகேசன், டி.வி. ஆதித்தன் உள்ளிட்ட பலர்

    கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai