சுடச்சுட

  

  தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு

  By தூத்துக்குடி  |   Published on : 22nd June 2015 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை இரவில் மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து இறந்தார்.

  தூத்துக்குடி பூபால்ராயபுரத்தைச் சேர்ந்தவர் ஜமாலுதீன் (41). மீனவரான இவர், சனிக்கிழமை இரவில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் படகுகளில் இருந்து மீன்களை இறக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் படகில் இருந்து கடலுக்குள் தவறி விழுந்தார்.

  இதையடுத்து அருகிலிருந்த மீனவர்கள் உடனடியாக கடலுக்குள் குதித்து ஜமாலுதீனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பின் ஜமாலுதீன் சடலமாக மீட்கப்பட்டார்.

  இதுகுறித்து தூத்துக்குடி தருவைக்குளம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai