சுடச்சுட

    

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் என்.எஸ்.எஸ். பிரிவுகளின் மாணவர் மாணவிகள், புனித மரியன்னை கல்லூரி, பிஷப் கால்டுவெல் கல்லூரி, எஸ்.ஆர்.என்.எம். கல்லூரி மாணவர்கள், செஞ்சிலுவை சங்கம், மனவளக்கலை மன்றம், விவேகானந்தா கேந்திர அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சூர்ய நமஸ்காரம், உக்கடாசனம், புஜாசனம், தனுராசனம், உத்தனபாதாசனம், சர்வாங்காசனம், கலசாசனம், நின்றபாதாசனம், தியானம், மூச்சுப்பயிற்சிகள் ஆகியவற்றை செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமை வகித்து மாணவர், மாணவிகளுடன் அமர்ந்து 30 நிமிடங்கள் யோகா பயிற்சியை செய்தார். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.

    இதில், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி துணைப் பொதுமேலாளர் கணேசன், மாவட்ட யோகா கழக செயலர் சண்முகப்பிரியா, யோகா பயிற்சியாளர் சுப்பிரமணியன், அரசு வழக்குரைஞர் யு.எஸ். சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் செல்வராஜன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு கழக பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் நேரு இளையோர் மையம் சார்பில் தருவை மைதானத்திலும், ஈசா யோக மையம் சார்பில் சுப்பையா வித்யாலயம் பள்ளியிலும், தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்திலும்,

    தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திலும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai