சுடச்சுட

    

    ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் கோயிலில் நடராஜர் பச்சை சாத்தி தரிசனம்

    By ஆறுமுகனேரி,  |   Published on : 22nd June 2015 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயில் ஆனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீநடராஜர் பச்சை சாத்தி தரிசன பவனி நடைபெற்றது.

    இத்திருக்கோயில் ஆனி உத்திர பெருந்திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி, தினசரி காலை மற்றும் இரவு சுவாமி மற்றும் அம்பாள் பூஞ்சப்பரத்தில் பவனி நடைபெற்றது.

    4ஆம் திருவிழாவான புதன்கிழமை இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி குடவருவாயிலில் சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன. பின்னர் வீதியுலா நடைபெற்றது.

    சனிக்கிழமை 7ஆம் திருவிழாவன்று காலையில் சுவாமி, அம்பாள் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. காலையில் ஸ்ரீநடராஜருக்கு திருக்காப்பு கட்டுதலும், உருகு சட்டசேவையும் நடைபெற்றது. இரவு ஸ்ரீநடராஜ பெருமான் சிவப்பு சாத்தி தரிசனமும், பவனியும் மற்றும் பஞ்சமூர்த்தி திருவீதி உலாவும் நடைபெற்றது.

    ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீநடராஜர் வெள்ளை சாத்தி தரிசனம் நடைபெற்றது. மாலையில் பச்சை சாத்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஸ்ரீநடராஜர் தரிசனம் மற்றும் பவனி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 9ஆம் திருவிழாவான திங்கள்கிழமை காலையில் சுவாமி, அம்பாள் பூஞ்சப்பரத்தில் பவனியும், இரவில் சுவாமி, அம்பாள் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகள் பவனியும் நடைபெறும்.

    பத்தாம் திருவிழாவான 26ஆம் தேதி இரவு சுவாமி, அம்பாள் சப்தாவர்ண காட்சி, திருவீதி உலா நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனத்தாரும், பக்த ஜன சபையினரும் செய்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai