சுடச்சுட

  

  24இல் நடைபெற இருந்த ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

  By தூத்துக்குடி,  |   Published on : 22nd June 2015 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடியில் ஜூன் 24ஆம் தேதி நடைபெற இருந்த ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியில் இருக்கும் போது மரணமடைந்தவர்கள் ஆகியோரது ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் இதர ஓய்வூதியப் பணபலன்கள் வழங்குவதில் ஏற்படுகின்ற காலதாமதம் மற்றும் இதர குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றும் வகையில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.

  அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 24ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் சென்னை, ஓய்வூதிய இயக்குநரால் குறைதீர் கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணத்தால் ஜூன் 24ஆம் தேதி நடைபெற இருந்த ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai