சுடச்சுட

  

  எட்டயபுரத்தில் ஏஐடியூசி கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க மாவட்டக் குழுக் கூட்டம்  நடைபெற்றது.

  இக் கூட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சேது, வட்டச் செயலர் குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில், சங்க மாநில துணைச் செயலர் கோவைசெல்வராஜ் கலந்துகொண்டு பேசினார்.

  தீர்மானங்கள்: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1982 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு உடல்உழைப்புத் தொழிலாளர் சட்டத்தை முறையாக செயல்படுத்தவேண்டும்; தொழிலாளர்கள் நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் பணப்பயன்கள் உள்ளிட்ட உதவிகள் ஆகியவற்றை உயர்த்தி வழங்கவேண்டும்; நல வாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்து 60 வயதைக் கடந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  இதில், வட்டக்குழு உறுப்பினர்கள் ஜானகி,சின்னத்தாய்,கெங்காதேவி,தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் இளசைமணியன்,மாவட்டக்குழு உறுப்பினர்கள் உத்தண்டராமன்,கிருஷ்ணன் உள்ளிட்டசங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். குணசீலன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai