சுடச்சுட

    

    கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்ட கிராம நிர்வாக அலுவலர் கட்டடத்தை அகற்ற உத்தரவிட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும், கட்டடத்தை மீண்டும் கட்ட வலியுறுத்தியும் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டத் தலைவர் வைரமுத்து தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மாரிசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

    இதில், வட்ட துணைத் தலைவர் அமர்நாத், வட்டச்  செயலர் முத்துராஜ், வட்டப் பொருளாளர் சுப்புராஜ், துணைச் செயலர் ஆதிலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    சாத்தான்குளம்:÷சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் சுரேஷ்ராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க வட்டத் தலைவர் ராஜேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலர் சுடலைவடிவேல், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் முருகன், கிராம உதவியாளர்கள் சங்க வட்டக் கிளைத் தலைவர் கருப்பசாமி, வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க வட்ட இணைச் செயலர் காதர்முகைதீன், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டச் செயலர் மணிகண்டன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்ட இணைச் செயலர் கார்த்திகா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai