சுடச்சுட

  

  சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே பதவி விலக வேண்டும்: பிருந்தா காரத்

  By dn  |   Published on : 23rd June 2015 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஐ.பி.எல். முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு ஆதரவாகச் செயல்பட்ட மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலக வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் வலியுறுத்தினார்.

  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்  உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 3 நாள்கள் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை வந்த அவர்,  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  லலித் மோடிக்கு ஆதரவாகச் செயல்பட்ட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகிய இருவரும் தங்கள் பதவியிலிருந்து உடனே விலக வேண்டும். இல்லையென்றால் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இப் பிரச்னை எழுப்பப்படும்.

  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முடக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இத்திட்டம்குறித்து பிரதமர் மட்டுமன்றி அனைத்து அமைச்சர்கள், அரசியல் தலைவர்களும் ஆய்வு செய்ய வேண்டும்.

  குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அய்யனேரி கிராமத்தில் நான் ஆய்வு செய்தபோது, இத்திட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை எனத் தெரியவந்தது. குறிப்பாக, குடிநீர் வசதி,  குழந்தைகள் காப்பகம் உள்ளிட்ட வசதிகள்கூடச் செய்துதரப்படவில்லை என்று தெரிவித்தனர். ஆகஸ்ட் 1 முதல் 14ஆம் தேதி வரை இடதுசாரி அமைப்புகளின் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் பிரசார இயக்கம் நடத்தவுள்ளோம். செப்டம்பர் 2ஆம் தேதி அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது என்றார் அவர்.

  பேட்டியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அர்ஜுனன், மாநிலக் குழு உறுப்பினர் மல்லிகா மற்றும் கட்சி நிர்வாகிகள் சீனிவாசன், முத்துகாந்தாரி, முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai