சுடச்சுட

  

  தூத்துக்குடியில் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

  மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கைத் துறை ஆகியன சார்பில், இப்பேரணி தூத்துக்குடியில் நடைபெற்றது.  பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணியை, மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தொடங்கிவைத்தார். பேரணியில் ஆட்சியருடன் சார்-ஆட்சியர் கோபாலசுந்தரராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் கு. தமிழ் செல்வராஜன், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று, தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai