மரக்கன்று நடும் விழா
By dn | Published on : 23rd June 2015 12:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உலக வறட்சி மீட்பு தினத்தை முன்னிட்டு மீனாட்சிபுரத்தில் மரக்கன்று நடும் விழா தொடங்கியது.
உலக வறட்சி மீட்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் உத்தரவின்பேரில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 4.90 லட்சம் மதிப்பீட்டில் மீனாட்சிபுரம் முதல் அய்யாக்கோட்டையூர் வரை நெடுஞ்சாலையின் இருபுறமும் மரக்கன்று நடுதல் மற்றும் ரூ. 2.90 லட்சம் மதிப்பில் ஆசைத்தம்பி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி பெறப்பட்டு வேலையாள்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமை வகித்தார். மீனாட்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன், ஒன்றியப் பொறியாளர் மார்கோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பணி மேற்பார்வையாளர் சரவணமுருகன், ஊராட்சி செயலர் தேவிகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.