சுடச்சுட

  

  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வுரிமைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

  இச்சங்கத்தின் 2ஆவது மாநில மாநாடு கோவில்பட்டியில் திங்கள்கிழமைமுதல் 3 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி திங்கள்கிழமை ராமசாமி தாஸ் பூங்கா முன்பிருந்து புறப்பட்ட இப் பேரணியை புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப்பெருமாள் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

  பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுக்கூட்டம் நடைபெறும் காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முன்னாள் எம்.பி.யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான பிருந்தாகாரத், ஊனமுற்றோர் உரிமைக்காக தேசிய மேடை செயலர் முரளிதரன், மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலத் தலைவர் ஜான்சிராணி, மாநில துணைத் தலைவர் லட்சுமணன், மாநிலச் செயலர் நம்புராஜன் ஆகியோர் பேசினர்.

  கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலர் முருகன், நகர்மன்ற உறுப்பினர் ஜோதிபாசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் முத்துகாந்தாரி வரவேற்றார். சக்கரையப்பன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai