சுடச்சுட

  

  வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

  By dn  |   Published on : 23rd June 2015 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது.

  கூட்டத்துக்கு தெற்கு மாவட்டத் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் ஜோதிமணி வரவேற்றார். நாசரேத் செல்வன், மாவட்ட துணைத் தலைவர் யாபேஸ், மாவட்ட இணைச் செயலர் பாஸ்கர், உடன்குடி சங்கத் தலைவர் கார்த்தீசன், செயலர் பவுல் சேம்ராஜ், இணைச் செயலர் முருகன் ஆகியோர் பேசினர். சாத்தான்குளம் அரசு பணிமனை பணியை விரைந்து முடிக்க வேண்டும்; மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் பாடப் பிரிவைத் தொடங்கவேண்டும்;  சாத்தான்குளம் நீதிமன்றக் கட்டடங்களை தேர்வு செய்த இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாத்தான்குளம் வர்த்தக சங்க நிர்வாகி வேணுகோபால் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai