சுடச்சுட

    

    ஆழ்வார்தோப்பில் சிறு குடும்ப நெறி விழிப்புணர்வு முகாம்

    By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 24th June 2015 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகத்தில் சிறு குடும்ப நெறி விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதி வட்டாரங்களான தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஓட்டப்பிடாரம் ஆகிய 8 வட்டாரங்களில், 3ஆவது அல்லது அதற்கு மேல் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.

    எனவே இப்பகுதியில் சிறு குடும்ப நெறி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் கல்யாண்ராம் தலைமை வகித்தார். பேட்மாநகரம் மருத்துவ அலுவலர் தங்கலட்சுமி, கிராம உதயம் நிறுவனர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏரல் வட்டார விரிவாக்க அலுவலர் சுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட குடும்பநலச் செயலக மக்கள் கல்வி தகவல் அலுவலர் முருகன் திட்ட விளக்கவுரை ஆற்றினார். ஏரல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆழ்வாரப்பன் நன்றி கூறினார்.

    கிராம உதயம் கிளை அலுவலக மேலாளர் வேல்முருகன், சமுதாய சுகாதார செவிலியர் தேவிகா, கிராம சுகாதார செவிலியர் சாந்தி, பேட்மாநகரம் சுகாதார ஆய்வாளர்கள் பிச்சாண்டி, கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறு குடும்ப நெறி குறித்த விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கை, தலைமையாசிரியர் த. சோபிதராஜ் தொடங்கிவைத்தார்.

    முதுநிலை ஆசிரியர் ஜான் குணசிங் ஜெபராஜ் வரவேற்றார். இதில், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் விமலநாதன், வட்டார விரிவாக்க கல்வியாளர் டேவிட் ஞானசேகர், ஆரம்ப சுகாதார நிலைய சமுதாய சுகாதார செவிலியர் வீரலட்சுமி ஆகியோர் பேசினர்.

    பள்ளி முன் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. உடற்கல்வி ஆசிரியர் பொன்ராஜ் கோயில்தாஸ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai