இன்பென்ட் ஜீசஸ் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி
By ஸ்ரீவைகுண்டம் | Published on : 24th June 2015 12:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வல்லநாடு அருகே உள்ள இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் வளர்த்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு கல்லூரி முதல்வர் வேல்முருகன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர்கள் ஆனந்த், ஆல்வின் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கிவைத்தனர். வகுப்பறையில் முதலுதவி என்ற தலைப்பில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் வசீகரன் பேசினார்.
உலக சமுதாய சேவை நிறுவனத் தலைவர் வேணுகோபால், செயலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர். கல்லூரி துணைத் தலைவர் பாஸ்கரன் நன்றி கூறினார்.