எட்டயபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
By எட்டயபுரம் | Published on : 24th June 2015 12:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
எட்டயபுரத்தில் விஸ்வகர்மா கல்வி அறக்கட்டளை சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, அறக்கட்டளை செயலர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். பாரதி நற்பணி மன்றச் செயலர் மாடசாமி, அறக்கட்டளை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வைத்தீஸ்வரன், செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஸ்வகர்மா ஜனசக்தி தொழிற்சங்க மாநிலச் செயலர் மகேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பள்ளி கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். இதில், நகைத் தொழிலாளர்கள் சங்க நகரத் தலைவர் சிவா, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கண்ணன், பாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி விஸ்வகர்மா கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மூர்த்தி வரவேற்றார். அறக்கட்டளை துணைச் செயலர் மணிகண்டன் நன்றி கூறினார்.