Enable Javscript for better performance
கோவில்பட்டியில் த.மா.கா.வினர் சாலை மறியல்: 23 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் த.மா.கா.வினர் சாலை மறியல்: 23 பேர் கைது

    By கோவில்பட்டி  |   Published on : 24th June 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் ரூ.5 கோடி செலவில் கட்டுமானப் பணி தொடங்கப்படவுள்ளது. இதையடுத்து, நகர பேருந்துகள் ராமசாமி தாஸ் பூங்கா பின்புறம் உள்ள தாற்காலிக பேருந்து நிலையத்திலிருந்தும், புறநகர் பேருந்துகள் கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்தும் கடந்த 17ஆம் தேதி முதல் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில், கோவில்பட்டி எனப் பெயரிடப்பட்ட அனைத்து பேருந்துகளும் அண்ணா பேருந்து நிலையம் முன் வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பயணியர் விடுதி முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். கட்சியின் கோவில்பட்டி பொறுப்பாளர் ராஜகோபால் தலைமையில், அண்ணா பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆனந்தசாமி, உணவுப் பொருள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் உள்பட 23 பேர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai