Enable Javscript for better performance
கோவில்பட்டி அருகே முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    திமுக தலைவர் கருணாநிதியின் 92ஆவது பிறந்த நாள் விழா, மூத்த உறுப்பினருக்கு பாராட்டு விழா, மரக்கன்று நடும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    கோவில்பட்டி வட்டம், இலுப்பையூரணி ஊராட்சி சண்முகா நகரில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, இலக்கிய அணி மாவட்டத் தலைவர் சோழபெருமாள் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் தங்கராஜ், இலுப்பையூரணி ஊராட்சித் தலைவி செல்வி சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வடக்கு மாவட்டச் செயலர் கே.ராஜாராம் கட்சிக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து, மேற்கு ஒன்றிய செயலர் வீ.முருகேசன் பொதுமக்களுக்கு இனிப்பு  வழங்கினார்.

    இலுப்பையூரணி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முனியசாமிக்கு சால்வை அணிவித்து கெளரவித்தனர். தொடர்ந்து, தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், இனாம்மணியாச்சி முன்னாள் ஊராட்சித் தலைவர் பச்சமால், நகர துணைச் செயலர் காளியப்பன், மாவட்ட பிரதிநிதி ஈஷா முத்து ஆகியோர் பேசினர்.

    பொதுக்குழு உறுப்பினர் பா.மு.பாண்டியன் மரக்கன்று நடும் விழாவை தொடங்கிவைத்தார். விழாவில், ஒன்றிய நிர்வாகிகள் பொன்னுசாமி, சந்திரசேகர், சரவணக்குமார், தங்கமாரி நாகராஜன், 13ஆவது வார்டு கிளை நிர்வாகிகள் சுப்பையா, மாரியம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  ஒன்றியப் பொருளாளர் கண்ணன் வரவேற்றார். பிரதிநிதி அசோக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை 13 ஆவது வார்டு கிளைச் செயலர் பொன் பாக்கியநாதன், பிரதிநிதி பா.முத்துப்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai