Enable Javscript for better performance
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ரூ. 13.09 லட்சம் உண்டியல் வசூல்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ரூ. 13.09 லட்சம் உண்டியல் வசூல்

    By கோவில்பட்டி  |   Published on : 24th June 2015 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.13.09 லட்சம் காணிக்கை  வசூலானது.

    இக் கோயிலுடன் இணைந்த மார்க்கெட் சாலை முருகன் கோயில், சுந்தரராஜ பெருமாள் கோயில், தெப்பக்குளம் அருகேயுள்ள விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் உள்ள சுமார் 19 உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி செண்பகவல்லி அம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

    திருநெல்வேலி இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் கண்ணதாசன், ஆய்வாளர் மாரியப்பன், கோயில் நிர்வாக அதிகாரி பூவலிங்கம் ஆகியோர் முன்னிலையில், மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள், விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    மொத்தம், ரூ. 8லட்சத்து 5ஆயிரத்து 677 வசூலானது. மேலும், பக்தர்கள் காணிக்கையாக தங்கம் 66 கிராம் மற்றும் வெள்ளி 330 கிராம் செலுத்தியிருந்தனர்.

    திருப்பணிக் குழு உண்டியல்: இதுபோல, செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் வைக்கப்பட்டிருந்த 2 திருப்பணிக் குழு உண்டியல் எண்ணும் பணியும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், ரூ. 5லட்சத்து 4ஆயிரத்து77 உண்டியல் வசூலானது.

    மொத்தத்தில், ரூ.13லட்சத்து 9ஆயிரத்து 754 உண்டியல் காணிக்கை பணம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai