சுடச்சுட

  

  கோவில்பட்டி மேற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

  By கோவில்பட்டி  |   Published on : 24th June 2015 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டியில் மேற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது.

  இக் கூட்டத்துக்கு, மேற்கு வட்டாரத் தலைவர் ரமேஸ்மூர்த்தி தலைமை வகித்தார். துணைத் தலைவர் முத்துராமலிங்கம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குருராஜ், ஹரிபாலகிருஷ்ணன், சுப்பையா, ராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  வடக்கு மாவட்டத் தலைவர் காமராஜ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சுப்பாராயன், வீரபெருமாள், ராஜா, திருப்பதிராஜா, மாரியம்மாள், ராஜசேகர் ஆகிய சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசினர்.

  கூட்டத்தில், வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போதுமான மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்; கால்நடை பராமரிப்புத் துறை மூலம் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்குத் தேவையான நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் கிராமத்துக்கே சென்று பராமரிக்க உதவி செய்ய வேண்டும்; கோவில்பட்டி பகுதியில் இயங்கி வரும் பள்ளி, கல்லூரிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி பயில முன்னுரிமை கொடுத்து இடம் அளிக்க வேண்டும்; கோவில்பட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அதிகம் நடைபெறும் பகுதிகளில் விபத்து தடுப்பு சிவப்பு விளக்குகள் மற்றும் விபத்து குறித்த எச்சரிக்கை பலகைகளை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

  கூட்டத்தில், மேற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai