சுடச்சுட

  

  சாத்தான்குளத்தில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நாளை தொடக்கம்

  By சாத்தான்குளம்  |   Published on : 24th June 2015 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 6ஆம் ஆண்டு ரெடீமர்ஸ் கோப்பைக்கான வாலிபால் போட்டிகள்  வியாழக்கிழமை (ஜூன் 25) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.

  சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆர்எம்பி புலமாடன் செட்டியார்  மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெறும் போட்டியில், சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி அணி, முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளி அணி, கிறிஸ்டியாநகரம் டிஎன்டிடிஏ மேல்நிலைப்பள்ளி அணி, தூத்துக்குடி கார்டுவேல் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அணிகள் கலந்துகொள்கின்றன. 

  போட்டிக்கு சாத்தான்குளம் பாஸ்டிரேட் சேர்மன் செல்வின் சார்லஸ் தலைமை வகிக்கிறார். பள்ளித் தாளாளர் தே. தனராஜ், பள்ளித் தலைமையாசிரியர் ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.  நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம்  மோகன் சி லாசரஸ்  போட்டிகளை தொடங்கிவைக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai