Enable Javscript for better performance
சாலை ஆய்வாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சாலை ஆய்வாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

    By கோவில்பட்டி  |   Published on : 24th June 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை தொழிற்கல்வி சாலை ஆய்வாளர்கள் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

    இக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் பெத்துரமேஷ் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலர் சரவணகுமார், சங்கத்தின் கெளரவ ஆலோசகர் ஆத்தியப்பன், ஸ்டாலின் ஆகியோர் பேசினர்.  இதில், நேரடி நியமன சாலை ஆய்வாளர் நிலை - ஐஐ அனைவருக்கும் தர ஊதியம் ரூ.2,400 வழங்கியதை பிடித்தம் செய்ததைக் கண்டித்தும், சாலைப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க மறுப்பதைக் கண்டித்தும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு ரசீது பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் துணைத் தலைவர் சுப்புராஜ் வரவேற்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai